By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: சிக்கலைத் தாண்டி இரசிகர்களை ஈர்த்த அயலான்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

சிக்கலைத் தாண்டி இரசிகர்களை ஈர்த்த அயலான்!

Published January 13, 2024
Share
2 Min Read
SHARE

இன்று நேற்று நாளை திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ரவிக்குமாரின் இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங் ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கிறது அயலான்.

இந்தத் திரைப்படம் தொடங்கி 5 ஆண்டுகள் ஆகியிருந்தாலும் அதை முடிப்பதில் படக்குழு பல சிரமங்களைச் சந்தித்து வந்தது. எனினும், அதைக் கைவிடாமல் விடாப்பிடியாக இருந்து திரைக்குக் கொண்டு வந்திருக்கும் படக் குழுவைப் பாராட்டியாக வேண்டும்.

வேற்று கிரகத்தில் இருந்து பூமிக்கு சிதறிய அதிசக்திவாய்ந்த பொருள் ஒன்று பணத்தாசை பிடித்த பெரிய தொழில் அதிபரிடம் கிடைக்கிறது. அதை வைத்து உலகின் மிகப் பெரிய எரிசக்தி உற்பத்தி மூலமாக மாற நினைக்கும் வில்லனிடமிருந்து அந்த சக்திவாய்ந்த பொருளைத் தேடி பூமிக்கு வருகிறது ஏலியன். அதை மீண்டும் ஏலியன் கொண்டு சென்றதா இல்லையா? அதற்கு சிவகார்த்திகேயன் எப்படி உதவுகிறார்? என்பதே அயலான் திரைப்படத்தின் கதை.

ஏலியன் தொடர்பான கதைகள் ஹாலிவுட்டில் நிறைய வந்திருக்கின்றன. இன்னும் சொல்லப் போனால் ஏலியன்களை ஹாலிவுட் படங்கள்தான் அறிமுகம் செய்தன எனலாம். ஆனால் தமிழில் அத்தகைய படங்களின் எண்ணிக்கையும், அதற்கான முயற்சியும் ஒப்பீட்டளவில் குறைவு. அதை உருவாக்கும் பொருள் செலவும், அதற்கான முயற்சிகளும் காரணமாக இருக்கலாம். தமிழிலும் இத்தகைய திரைப்படங்களை எடுக்க முடியும் என சொல்லி நீண்ட காத்திருப்புக்குப் பின் அதை திரைக்கு கொண்டு வந்திருக்கிறது அயலான் படக்குழு.

நாம் யூகிக்கக் கூடிய கதை என்றாலும் அதை விறுவிறுப்பாக கொண்டு செல்வது அடங்கியிருக்கிறது இயக்குநரின் திறமை. படத்தின் தொடக்கக் காட்சிகள் சற்று நீண்டதாக இருந்தாலும் அதன் பின் மெதுவாக வேகமெடுக்கத் தொடங்குகிறது திரைப்படம். 6 ஆண்டுகளுக்கு முந்தைய சிவகார்த்திகேயனின் தொடக்கக் கால நடிப்புச் சாயல் படத்தில் தெரிகிறது. ஆக்-ஷன் ஹீரோவாக மாறிய பிறகு அவரின் பழைய பாணியிலான நடிப்பு பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது.

ரகுல் பிரீத் சிங் நாயகியாகவும், கருணாகரன், யோகிபாபு, பாலா சரவணன், பானுப்ரியா என பலர் நடித்துள்ளனர். ஏலியனுடன் இவர்கள் அடிக்கும் லூட்டி கலகலப்புக்கான வாய்ப்பு. ரஹ்மானின் இசையும், நீரவ் ஷாவின் ஒளிப்பதிவும் டாட்டூ எனும் பெயரில் வரும் நடிகர் சித்தார்த்தின் குரலும் குழந்தைகள் முதல் பெரியோரைக் கவரும் வகையில் இருக்கிறது. இந்தப் பொங்கல் பண்டிகையை ஏமாற்றாமல் குழந்தைகள் மற்றும் குடும்பத்திற்கான படமாக அயலானை கட்டாயம் ரசிக்கலாம்.

Editor S.Shanuja January 13, 2024 January 13, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article கெஹெலியவுக்கு எதிராக சி.ஐ.டி யில் முறைப்பாடு!
Next Article ஹரக் கட்டாவுடன் தொடர்பு; 6 பேர் கைது!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

சினிமா

நடிகர் ஸ்ரீ மருத்துவ பராமரிப்பில்!

April 18, 2025
Breaking newsசினிமா

முதல் நாளிலேயே 126 கோடி ரூபாய் வசூலித்த “தி கோட்”!

September 6, 2024
இந்திய செய்திகள்சினிமாதுயர் பகிர்தல்

நகைச்சுவ நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்!

August 27, 2024
சினிமா

100 கோடி வசூலைத் தாண்டிய கேப்டன் மில்லர்!

January 29, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?