தமிழ் மக்கள் புதிய அரசியல் புரட்சிகர மாற்றத்திற்கு தயாராக வேண்டும்_ பொன் சுதன் தீபாவளி வாழ்த்துச் செய்தி!
தீபாவளி தினத்தை கொண்டாடிக்கொண்டிருக்கும் அனைத்து உறவுகளுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
அஞ்ஞான இருள் விலகி ஒளி பரவச் செய்யும் விதமாக கொண்டாடப்படும் இந்த தீபத் திருநாளில் தமிழ் மக்களின் மேல் பரவிக்கிடக்கும் சகலவிதமான இருள் அனைத்தும் விலகி சாந்தியும் சமாதானமும் நிலைத்திட இந்த தீபத் திருநாளில் இறைவனை பிரார்த்திப்போம்.
காலங்காலமாக ஏமாற்று அரசியலால் தமிழ் மக்களின் முதுகில் ஏறி சவாரிவிட்டு தத்தமது குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக நலன்களில் மட்டுமே அக்கறை செலுத்திய போலி அரசியல்வாதிகளை விலக்கி தமிழ் இனத்தின் விடியலுக்காகவும் பொருளாதார மீட்சிக்காகவும் செயலாற்றக்கூடயவர்களை மக்கள் இனங்காண வேண்டும்.
இலங்கையின் புதிய அரசியல் மாற்றம் போல் தமிழ் மக்களும் புதிய அரசியல் புரட்சிகர மாற்றத்திற்கு தயாராக வேண்டும். இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் என் கரங்களை பலப்படுத்துங்கள்.அடுத்த ஆண்டு தீபாவளிக்குள் உங்கள் பொருளாதார வளர்ச்சிக்காக சிறந்த செயற்திட்டங்களை செயற்படுத்துவேன் என்பதை இந்த தீபத் திருநாளில் உறுதி கூறுகிறேன் என அவரது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொன் சுதன் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாழ், கிளிநொச்சி மாவட்டத்தில் தண்ணீர் பைப் சின்னத்தில் 6ம் இலக்கத்தில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.