“கோத்தபாயவின் உரை வெறும் குப்பை” சீற்றத்துடன் சம்பந்தன்!
“கோத்தபாயவின் கொள்கை விளக்க உரை வெறும் குப்பை, அதில் ஒன்றுமே இல்லை, இதை அப்படியே போய் அவரிடம் சொல்லுங்கள்” என பஷில் ராஜபக்சவிடம் சம்பந்தன் காட்டமாக தெரிவித்துள்ளார்.
9வது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச ஆரம்பித்து வைத்தார். அதன் பின்னர் ஜனாதிபதி ஆற்றிய கொள்கை விளக்க உரை தொடர்பிலேயே சம்பந்தன் இவ்வாறு காட்டமாக பஷில் ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்
“நான் தேனீர் உபசாரத்திற்கு வரவில்லை. வந்தால் நான் இதை நேரடியாகக் கூறவேண்டியிருக்கும். அப்படி வேண்டாம் என்பதற்காகத்தான் தேனீர் உபசாரத்தையே தவிர்க்கிறேன்” எங்களுடைய நாட்டின் தேசிய பிரச்சினை குறித்து எதுவும் இந்த பேச்சில் இல்லை.
இந்த பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் உங்களுக்கு எதுவும் சரிப்பட்டு வராது. உருப்படவே மாட்டீர்கள் என்பதை அவரிடம் போய் சொல்லுங்கள் என பஷில் ராஜபக்சவிடம் கோபத்துடன் தெரிவித்தார்.
அதற்கு பஷில் ராஜபக்ச “தங்யூ தங்யூ” என சமாளித்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.