பாணின் விலையை இன்றைய தினம் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பில் அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்கத்தின் தலைவர், என்.கே ஜயவர்தன தெரிவிக்கையில்
சந்தையில் போதியளவில் கோதுமை கையிருப்பில் உள்ளமையால் பாண் விலையை குறைப்பது தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றுக்குழு கூடி எடுக்கவுள்ளது .
கடந்த புதன்கிழமை வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, கோதுமை மாவின் கையிருப்பு போதுமானளவு இருந்தால் பாண் விலையை குறைக்க முடியும் என வெதுப்பக உரிமையாளர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
அதன்படி இன்றைய தினம் ஒரு இறாத்தல் 450 கிராமுடைய பாணின் விலையை 10 ரூபா முதல் 20 ரூபா வரையில் குறைக்க எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.