யாழ் பல்கலைக்கழக மாணவன் மீது வட்டுக்கோட்டை பொலிசார் இன்று காலை தாக்கிய நிலையில் அடி தாங்கமுடியாது பொலிஸ் நிலையத்தினை விட்டு ஓடி வந்த மாணவன் உயிரை காப்பாற்றுமாறு கோரி மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது வட்டுக்கோட்டை கோட்டை காடு பகுதியினை சேர்ந்த கருணாகரன் நிதர்ஷன் எனும் 27 வயதான இளைஞன் தனது கற்றல் நடவடிக்கைகளுக்காக இன்று காலை யாழ் பல்கலைக்கழககத்திற்கு தனது வீட்டிலிருந்து சென்றுள்ளார்.
இந்நிலையில் சித்தன்கேணி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சென்றுவிட்டு மீள திரும்பி வந்த பொழுது வட்டு இந்து கல்லூரிக்கு அண்மையாக நின்ற பொலிசார் வழிமறித்துள்ளனர்.வழிமறித்த பொலிசார் நாம் மறித்த பொழுது எதற்காக நிற்காது சென்றாய் என கேட்டனர்.இந்நிலையில் போக்குவரத்து பொலிசார் இல்லை என்ற அடிப்படையில் அவசரமாக சென்றேன் என கூறினேன் இந்நிலையில் திடீரென அங்குவந்த மேலதிக சிவில் உடைதரித்த பொலிசார் வீதியில் வைத்து சரமாரியாக தாக்கினர் .இதனை காணொலியும் எடுத்தேன். இந்நிலையில் தொலைபேசியினையும் பறித்து என்ன பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
தொடர்ந்து அறை ஒன்றினுள் ஆறு பொலிசார் காலை விரித்து தலைகீழாக தூக்கி அடித்தனர். அடித்து கொண்டு தொலைபேசியில் உள்ள காணொலியை அழிப்பதற்கு தொலைபேசி கடவுச்சொல்லை கேட்டனர். நான் மறுத்தேன் மறுத்த பொழுது தொடர்ச்சியாக தாக்குதல் நடாத்தினர்.
போக்குவரத்து விதிகளை மீறியிருந்தால் எனக்கு தண்டம் விதியுங்கள் இல்லை நீதிமன்றம் அனுப்புங்கள் என கூறியும் அடித்தனர். இதனையடுத்து எனக்கு சுவாசம் உள்ளெடுக்க பிரச்சினை ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக என்னை வெளியில் கொண்டு வந்து அமர்த்தினர். அமர்த்திய பொழுது வீதியில் என்னை அடித்து செய்தி கேட்டு தாயார் வருகை தந்தார் .
இந்நிலையில் அடிக்கு பயந்து இருந்த என்னை மீண்டும் தாக்குவதாக கூறிய நிலையில் பயத்தில் ஓடி வந்து விட்டேன்.
தற்பொழுது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாட்டினை பதிவு செய்கின்றேன்.இன்னுமொரு அலெக்சாக என்னை வட்டுக்கோட்டை பொலிசார் கொன்றாலும் என்ற பயத்திலேயே ஓடி வந்தேன் .எனக்கு ஏதும் நடந்தால் வட்டுக்கோட்டை பொலிசாரே முழுமையான பொறுப்பினையும் ஏற்க வேண்டும் என தெரிவித்தார்.