வாக்குமூலம் வழங்கச் சென்றவர் 5வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை!
குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு (CID) வாக்குமூலம் வழங்கச் சென்றவர் 5வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நிதி மோசடி தொடர்பில் வாக்குமூலம் வழங்க குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு சென்ற பெண் ஒருவரே இவ்வாறு மாடியிலிருந்து குதித்து உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.