கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சடலமானது இன்றையதினம் (20-10-2024) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் அவர் சடலமாக மீட்கப்பட்டதாகவும், சடலத்திற்கு அருகில் துப்பாக்கி ஒன்று காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பது தொடர்பில் இதுவரை கண்டறியப்படவில்லை.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளராக கடமையாற்றிய 49 வயதான கட்டுகஸ்தோட்டை வெரல்லகம பிரதேசத்தை சேர்ந்தவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.