யாழில் இளைஞன் மீது வாள் வெட்டுத் தாக்குதல்!
யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் பணிபுரியும் இளைஞன் மீது நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வாள் வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தெல்லிப்பளையை சேர்ந்த இளைஞன் மீதே வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த மூவரே தாக்குதலை மேற்கொண்ட பின்னர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் வாள் வெட்டுக்கான காரணம் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.