யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் புகையிரதம் – ஹயஸ் வான் விபத்துக்குள்ளானதில் தந்தை மற்றும் ஆறு மாத குழந்தை உயிரிழந்தனர்.
இணுவில் காரைக்கால் சிவன் கோயிலுக்கு அண்மையிலுள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையிலேயே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.
ஆனந்தராசா சுதாகரன் (32) என்பவரும், அவரது மகளான அப்சரா என்ற 6 மாத பெண் குழந்தையுமே உயிரிழந்துள்ளனர்.
அவர் தனது மனைவி, பிள்ளையுடன் ஹயஸ் வாகனத்தில் சென்ற போது, புகையிரதம் வருவதை அவதானிக்காமல் புகையிரத கடவையை கடக்க முற்பட்டுள்ளார். புகையிரத கடவையின் மையத்தில் வாகனத்தின் இயந்திரம் செயலிழந்து நின்றதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.