கிளிநொச்சியில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்புமனு தாக்கல்!
கிளிநொச்சியில் மூன்று பிரதேச சபைகளுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளது ஐக்கிய மக்கள் சக்தி.
ஐக்கிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி மாவட்ட பிரதான அமைப்பாளர் ம.மரியசீலன் தலைமையில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.
அதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தின் பூனகரி பிரதேச சபைக்கான வேட்புமனு நாளையதினம் (26) தாக்கல் செய்யப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி மாவட்ட பிரதான அமைப்பாளர் ம.மரியசீலன் தெரிவித்துள்ளார்.