யாழில் காணாமல் போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!
யாழ்ப்பாணம் மாதகலைச் சேர்ந்த குடும்பஸ்தரான தனியார் பேருந்து உரிமையாளர் மூன்று நாட்களாக காணாமல் போயிருந்த நிலையில் சங்கானை மண்டிகை குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மாதகலைச் சேர்ந்த குணபாலசிங்கம் கடம்பகுமார் எனும் 38 வயதான குடும்பஸ்தரே சங்கானை ‘மண்டிகை’ குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் கடந்த மூன்று நாட்களாக காணாமல் போயிருந்தார் என இளவாலை பொலிஸ் நிலையத்தில் குடும்பத்தினரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் சங்கானை மண்டிகை குளத்திலிருந்து இன்று மாலை குறித்த உரிமையாளர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.