இனவெறிப் படுகொலையின் சாட்சியமாக – செம்மணி புதைகுழியில் குழந்தை எச்சங்கள் கண்டெடுப்பு!
யாழ்ப்பாணம் – ஜூலை 22, 2025:
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான அகழ்வுப் பணிகள் இன்று 17வது நாளாக முன்னெடுக்கப்பட்டன.
இன்றைய அகழ்வில் மிக முக்கியமான மற்றும் மனதை உலுக்கும் கண்டுபிடிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன:
—
புதிதாக கண்டெடுக்கப்பட்டவை:
குழந்தைகள் பயன்படுத்தும் பால் போத்தல்
சிறுவர்கள் அல்லது குழந்தைகளுக்குரிய ஆடைகளை ஒத்த துணி துண்டுகள்
6–7 சிறுவர்கள் அல்லது குழந்தைகளுடையதாக சந்தேகிக்கப்படும் எலும்புக்கூடுகள்
இவை அனைத்தும் மொத்தமாக 8 புதிய மனித எச்சங்கள் ஆகும். இதனால் மொத்த எச்சங்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது.
—
முந்தைய நிலவரம்:
65 எலும்புக்கூடுகள் ஏற்கனவே தோண்டி எடுக்கப்பட்டு, மேலதிக ஆய்வுகளுக்காக பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
—
⚖️ விசாரணை முன்னேற்றம்:
அகழ்வுப் பணிகள் யாழ்ப்பாண நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா அவர்களின் நேரடி மேற்பார்வையில் நடந்து வருகின்றன.
இத்துடன் தொடர்புடைய விசாரணைகள், யாழ் பொலிஸிலிருந்து CID அதிகாரிகளுக்கு மாற்றப்பட்டுள்ளன.
—
குழந்தைகளின் எச்சங்கள் மற்றும் பால் போத்தலின் கண்டுபிடிப்பு, செம்மணி படுகொலையின் கோரமான உண்மைகள் மேலும் வெளிச்சத்திற்கு வருகிறதென நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
—
Editor: கதிர்
️ Published: July 23, 2025
—
இப்படிப்பட்ட சாட்சிகளால் மறைக்கப்பட்ட வரலாறுகள் வெளிச்சத்திற்கு வரக்கூடிய நேரம் இது தான் – பகிருங்கள்!