முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது – 26ஆம் திகதி வரை விளக்கமறியல்
கொழும்பு | 22.08.2025 – முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (22) குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட பின்னர் அவர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு விசாரணை இடம்பெற்றதைத் தொடர்ந்து, நீதிமன்றம் அவரை வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.
இந்த சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
—
Editor: கதிர்