ரில்வின் சில்வா ஜே வி பி செயலாளர்.!
தேசிய மக்கள் சக்தி (NPP)எனும் கட்சிதான் ஆட்சியில் உள்ளது அந்த கட்சியின் சின்னம் “திசைகாட்டி” அதன்மூலம் ஜனாதிபதியாக அநுரகுமார திசநாயக்காவும் பாராளுமன்ற உறுப்பினர்களாக 159, பேரும் ஜனநாய தேர்தல் மூலம் தெரிவாகி ஆட்சியில் உள்ளனர். அந்த ஆட்சி தற்போது ஒருவருடத்தை எட்டுகிறது.
மக்கள் விடுதலை முன்னணி ((JVP) 1965, மே,14, ல் நிறுவுணரான றோகனவிஜயவீராவால் ஆரம்பிக்கப்பட்டது அதன் சின்னம் “மணி” அந்தக்கட்சி தலைவராக இப்போது தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசநாயக்காவும், பொதுச்செயலாளராக ரில்வின்சில்வாவும் உள்ளனர்.
மக்கள்விடுதலை முன்னணி(JVP) யின் குழந்தைதான் தேசியமக்கள் சக்தி (NPP) 2015, ல் புதிய கட்சியாக ஆரம்பிக்கப்பட்டது
தேசிய மக்கள் சக்தியின் செயலாளராக நிகால் அபேசிங்கவும், தலைவராக தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்காவும் உள்ளார்.
இதில் கவனிக்கவேண்டியது..
மக்கள்விடுதலை முன்னணிக்கும், தேசியமக்கள்சக்திக்கும் தலைவர் ஒருவர்தான் பொதுச்செயலாளரகள்தான் இருவர் ம, வி, மு பொதுச்செயலாளர் ரில்வின்சில்வா, தே,ம,ச பொதுச்செயலாளர் நிகால் அபேயசிங்க.
ஜே வி பி பொதுச்செயலாளர் ரில்வில் சில்வாதான் நிர்வாக ரீதியாகவும், தீர்மானிக்கும் சக்தியாகவும் என் பி பி கட்சிக்கும் உள்ளார். நிகால் அபேயசிங்க தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளராக உத்தியோகபூர்வமாக செயல்பட்டாலும் ரில்வின் சில்வாதான் இரண்டு கட்சிகளையும் வழிப்படுத்தும் அதிகாரம் அவருக்கே உள்ளது.
தேர்தல் கடமை வேட்புமனுவில் கையொப்பம், தேர்தல் திணைக்களம், நாடாளுமன்றம் போன்றவற்றின் தொடர்புகள் காகித நடவடிக்கைகள் மட்டுமே தேசிய மக்கள் சக்தி பொதுச்செயலாளரால் கவனிக்கப்படுவதை காணலாம்.
சுருக்கமாக கூறுவதானால் ஜனாதிபதி அநுரகுமாரதிசநாயக்காவும் ரில்வின்சில்வா சொல்வதை செய்யும் ஒருவராகவே அந்த கட்சியின் கட்டுக்கோப்புகள், நிர்வாக நடைமுறைகள் எழுதப்படாத விதியாக உள்ளது.
அப்படியான ஒருவர்தான் ரில்வின்சில்வா யாழ்ப்பாணத்தில் நேற்று(07/09/2025) சர்வதேச விசாரணைக்கு இடமில்லை உள்ளூர் விசாரணையை தமது கட்சி செய்வதாகவும், ஏற்கனவே இருந்த அரசுகள்தான் போர் குற்றம் செய்தவர்கள், தாம் உத்தமர்கள் என்றமாதிரி கருத்தை கூறியுள்ளார்.
1994, சந்திரிகா ஜனாதிபதி காலம் தொட்டு 2005, மகிந்த ஜனாதிபதி காலம் 2010 முடியும் வரை சகல தமிழினப்படுகொலைகளுக்கும் நேரடியாகவும், மறைமுகமாகவும் துணைபோனவர்களும், இராணுவத்துக்கு சிங்கள இளைஞர்களை திரட்டிக்கொடுத்தவர்களும், 2006, ல் இணைந்த வடகிழக்கை நீதிமன்றில் நிறுத்தி இரண்டாக சட்டரீதியாக பிரித்தவர்களும் இந்த மக்கள் விடுதலை முன்னணி(JVP)தான்.
இப்போது யாழ்ப்பாணத்தில் வந்து ஏதோ தாம் இனப்படுகொலைகளுக்கு சம்மந்தம் இல்லாதவர்கள் போன்று வகுப்பு எடுத்துள்ளார்.
அவர் கூறியது சரி என தமிழர்கள் சிலரும் நம்பலாம் ஆனால் வரலாறுகளை எவராலும் மாற்ற முடியாது..
தமிழினப்படுகொலைக்கு துணைபோன சிங்கள கட்சிகளே இலங்கையில் பெருமளவில் உள்ளன.
அதில் மக்கள்விடுதலைமுன்னணியும், அதன் குழந்தை தேசியமக்கள் சக்தியும் விதி விலக்கல்ல அவர்களுக்கும் இனப்படுகொலைகளுக்கு சம்மந்தம் உண்டு.
எனவே உள்ளூர் நீதிப்பொறிமுறை தமிழினப்படுகொலைக்கு நீதியை பெற்றுத்தராது என்பதே கடந்தகால உண்மை.
-பா.அரியநேத்திரன்-
08/09/2025
மேலதிக செய்திகள்:_ கிழக்கில் கருணா குழு இனியபாரதியின் கடத்தல்கள் கொடூரம் (வீடியோ)