கடவுச்சீட்டுக்களை தாமதமின்றி பெற்றுக்கொள்ளும் செயற்பாட்டிற்காக 50 புதிய நிலையங்கள் ஜூன் மாத இறுதிக்குள் நிறுவப்படவுள்ளது.
இதன்மூலம், இந்த வருட இறுதிக்குள் கடவுச்சீட்டுகளை துரிதமாக வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
புகைப்படங்கள் மற்றும் கைரேகைகளை சேகரிப்பதற்காக ஐம்பது மாவட்ட செயலகங்களில் புதிதாக 50 நிலையங்கள் நிறுவப்படும் என அவர் கூறியுள்ளார்.
அதேசமயம், தேசிய அடையாள அட்டைகள் வழங்குவதற்கு மேலும் ஐந்து கிளைகள் இதனுடன் சேர்த்து இணைக்கப்பட்டவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடவுச்சீட்டு வழங்கும் புதிய நடைமுறை மூன்று நாட்களுக்குள் அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.