உணவகத்தில் உணவருந்திய ஒருவர் உயிரிழப்பு ஒன்பது பேர் வைத்தியசாலையில்! பாரிசில் பரிதாபம்!
Bordeaux நகரில் உள்ள Tchin Tchin Wine Bar என்னும் உணவகத்தில் கடந்த நான்காம் திகதி முதல் பத்தாம் திகதி வரை கண்ணாடிக் குவளையில் பதப்படுத்தப்பட்டு அடைக்கப்பட்ட சூடைமீன் உணவை எடுத்துக் கொண்டவர்களில் parisசை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்தார்.ஒன்பது பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தகவலை l’Agence régionale de santé (ARS) தெரிவித்துள்ளது. குறித்த உணவகத்தில் குறித்த காலப் பகுதியில் உணவருந்தியவர்கள் மிகவும் விழிப்பாக இருக்கும்படியும் l’Agence régionale de santé (ARS) கேட்டுக்கொண்டுள்ளது.
அமெரிக்கா, கனடா, ஜெர்மன் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களும் Paris மற்றும் Bordeaux மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட ஒன்பது பேரில் அடங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த உணவில் இருந்த கிருமிகளே நோய்க்கும், மரணத்துக்கும் காரணம் என ARS நிறுவனம் தெரிவித்துள்ளது.