தெல்லிப்பழை பொலிஸாருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை!
பாடசாலை இல்ல விளையாட்டு போட்டி தொடர்பில் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை தெல்லிப்பளை பொலீஸ் நிலையம் அழைத்து விசாரணை மேற்கொண்டமை தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு.
மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கு அமைய தெல்லிப்பளை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரியை நாளை 05.04.2024 பிற்பகல் 2.30 மணிக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழப்பாண அலுவலகத்தில் முன்னிலையாகி விளக்கமளிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழப்பான அலுவலகத்தால் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
கார்த்திகை பூ இலங்கையில் தடைசெய்யப்பட்ட ஒன்றாக சட்டம் இயற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.