கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விவசாயப்பாடத்தின் இரண்டாம் வினாத்தாள்கள் வெளியான சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் 10 ஆம் திகதியன்று இடம்பெற்ற கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விவசாயப்பாடத்தின் இரண்டாம் வினாத்தாள்கள் பரீட்சைக்கு முன்னதாகவே சமூக ஊடகங்களில் கசிந்ததாக தகவல் வெளியானது.
இதனைதொடர்ந்து நடத்தப்பட்ட மூன்று மொழிகளிலுமான பரீட்சை வினாத்தாள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த வினாத்தாள் சமூக வலைத்தளங்கள் ஊடாக பரப்பப்பட்டதாக வெளியான தகவலை உறுதிப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது உண்மைகள் வெளியாகியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய வினாத்தாள் வெளியான பின்னணி தொடர்பிலான விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.