சிறிலங்காவின் சுதந்திரதினம் தமிழர் தேசத்தின் கரிநாள்!
“சிறிலங்காவின் சுதந்திரதினம் தமிழர் தேசத்தின் கரிநாள்” என சிவில் சமூகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கையின் சுதந்திர தினத்திற்கு எதிரான நிகழ்வு இன்று முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இடம்பெற்றது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பொதுமக்கள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்காக நினைவு முற்றத்தில் பொதுச்சுடரும் ஏற்றப்பட்டது.
இன்று இலங்கையின் சுதந்திர தின கொண்டாட்டம் இடம்பெற்றுவரும் நிலையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தினுள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.