இந்தியா கோபிக்கும்! மீனவர் போராட்டத்தில் கலந்து கொள்ளாத த.தே. கூட்டமைப்பு MPகள்!
இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து வடக்கு மீனவர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுவந்த நிலையில் பல அரசியல்வாதிகள் குறித்த போராட்டத்தில் கலந்து கொள்வதை தவிர்த்துள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் இந்தியா கோபிக்கும் என்பதால் குறித்த போராட்டத்தில் கலந்துகொள்வதை தவிர்த்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
13ம் திருத்தத்தை ஆதரிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் வாதிகள் எவரும் குறித்த மீனவர்கள் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில் 13 ம் திருத்தம் தொடர்பில் அலட்டிக்கொள்ளாத நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன், சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகியோர் மீனவர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டதுடன் மீனவர்களின் போராட்டத்திற்கு ஆதர தெரிவித்திருந்தனர்.
வடக்கு மீனவர்கள் சிறீதரன் மற்றும் சுமந்திரனிற்கு வழங்கிய வரவேற்பால் கூட்டமைப்பின் இந்திய ஆதரவு நிலைப்பாடுடைய தற்போதைய மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைத்திருப்பதாக தெரியவருகிறது.
சில மீனவ சங்கங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு போராட்டத்திற்கு தமது ஆதரவு உள்ளதாக தெரிவித்துள்ளனர். எனினும் மீனவ பிரதிநிதிகள் இவர்கள் தொடர்பில் கணக்கெடுக்கவில்லை என்றும் தேர்தலின் போது இந்தியா சென்று வாக்கு கேட்கட்டும் என்று தெரிவித்துள்ளனர்.