கிளிநொச்சியில் கத்திமுனையில் பணம் நகை கொள்ளை!
கிளிநொச்சி நகரப்பகுதியில் அமைந்துள்ள நகை கடை ஒன்றின் உரிமையாளர் இரவு தனது கடையினை பூட்டிவிட்டு வீட்டிற்கு பயணித்த போது வீதியில் வழிமறித்த கொள்ளையர்கள் கடையில் உள்ள பணப் பெட்டியின் இரகசிய இலக்கத்தினை கூறுமாறு தாக்கியுள்ளனர்.
நகைக் கடை உரிமையாளர் பணப்பெட்டியில் இலக்கத்தை தவறாக கூறியதன் காரணத்தினால் கத்தியால் கையில் வேட்டியதாகவும் பின்னர் கொள்ளையர்கள் கடை உரிமையாளரின் முகத்தை மறைத்து கிளிநொச்சியில் உள்ள நகைகடைக்கு அழைத்து வந்ததாகவும் அதன் பின்னர் கடை உரிமையாளர் கொள்ளையர்களின் தாக்குதலால் வலி தாங்க முடியாமல் தானே நகைகள்மற்றும் பணம் என்பனவற்றை எடுத்து கொள்ளையர்களிடம் கொடுத்ததாகவும் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது
தனது கடையில் 15 பவுன் தங்க ஆபரணமும் ஒரு லட்சத்தி நாற்பதாயிரம் ரூபாய் வியாபார பணமும் வைத்திருந்ததாகவும் அதனை கொள்ளையர்கள் பறித்துச் சென்றுவிட்டதாகவும் . பின்னர் அயலவர்களின் உதவியுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சை பெற்று வருவதாகவும் கடை உரிமையாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்