குருந்தூர் மலையில் பிரமாண்டமாக கட்டியெழுப்பப்படும் விகாரை!
முல்லைத்தீவு குருந்தூர் மலையில் மிகப் பிரம்மாண்டமாக விகாரை கட்டப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் சுதந்திர தினமான இன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் மக்கள் ஆக்கிரமிக்கப்பட்ட குருந்தூர் மலைக்கு பயணித்தனர்.
குறித்த குருந்தூர் மலைப் பகுதியில் இருந்த ஆதிசிவன் கோவில் தமிழர்களால் பரம்பரை பரம்பரையாக வணங்கப்பட்டு வந்த நிலையில் குறித்த பகுதியில் புராதன பெளத்த விகாரை இருந்ததாக தெரிவித்து தொல்லியல் துறையினரால் ஆக்கிரமிக்கப்பட்டது.
இந்நிலையில் பொதுமக்கள் அப்பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இராணுவத்தினரின் பங்களிப்புடன் மிகப் பிரம்மாண்டமாக விகாரை கட்டப்படுவதாக இன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பயணித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
குருந்தூர் மலைக்கு அருகில் உள்ள 7 குடும்பங்களிற்கு சொந்தமான 36 ஏக்கர் விவசாய நிலத்தில் விவசாயம் செய்ய வேண்டாம் இது புனித பூமி மீறினால் கைதுசெய்யப்படுவீர்கள் என கட்டப்பட்டு வரும் விகாரையில் உள்ள பிக்கு எச்சரித்ததாக வயல் உரிமையாளர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.