தாயும் மகளும் தீயில் கருகிய நிலையில் மீட்கப்பட்ட விசாரணைகளில் திருப்பம்!
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாதன் குடியிருப்பு பகுதியில் தாயும் மகளும் தீயில் கருகிய நிலையில் 20.01.2022 சடலமாக மீட்கப்பட்டனர்.
இச்சம்பவத்தில் ஆனந்தராசா சீதேவி எனும் 47 வயதான ஏழு பிள்ளைகளின் தாயாரும் அவரது 17 வயது மகளான லக்சிகா என்பவரும் தீயில் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். சம்பவம் தொடர்பில் 22. 01. 2022 கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிவான்
எஸ். லெனின்குமார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார்.
கிளிநொச்சி தடயவியல் பொலிஸார் மேற்கொண்ட ஆராய்வின் போது அப்பகுதியிலிருந்து பெற்றோல் போத்தல், கைத்தொலைபேசி ஒன்றும் கத்தி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பல்வேறு கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
https://youtu.be/qXFbFBnQJZ0