யாழ்ப்பாணம் மண்டைதீவு கடல் பகுதியில் 188 கிலோ கிராம் கஞ்சா தொகை கடற்படையினரால் புதன்கிழமை (04) அதிகாலை கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்த டிங்கி படகினை சோதனை செய்ய முற்பட்ட போது படகில் இருந்த இரண்டு நபர்கள் தப்பிச் சென்ற நிலையில் 188 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் படகின் உரிமையாளர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கடற்படையின் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.