யாழில் எரிவாயு சிலிண்டர்களை திருடிய சந்தேக நபர்கள் கைது!
ஓட்டுமடம் பகுதியில் உள்ள லஃவ் எரிவாயு நிறுவனத்தின் களஞ்சிய சாலையை உடைத்து 52 வெற்றுச் சிலிண்டர்களை திருடிய குற்றச்சாட்டில் 6 சந்தேக நபர்கள் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த சில நாள்களுக்கு முன் ஓட்டுமடம் பகுதியில் உள்ள லஃவ் எரிவாயு நிறுவனத்தின் களஞ்சிய சாலையை உடைத்து 7 லட்சத்து 80 ஆயிரம் பெறுமதியான 52 வெற்றுச் சிலிண்டர்கள் திருட்டுப் போயிருந்தன.
யாழ்ப்பாணம் பொம்மைவெளி மற்றும் நாவாந்துறை பிரதேசங்களைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டடனர். சந்தேக நபர்களிடமிருந்து திருடப்பட்ட சிலிண்டர்களும் கைப்பற்றப்பட்டன.