லெப்டினன்ட் கேர்ணல் துவான் முத்தலிஃப் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரான வர்த்தகர், பொரளையில் வைத்து 20.05.2023 அன்று சுட்டுக்கொல்லப்பட்டார். அந்த படுகொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் அடையாளம் காணப்பட்ட நபரின் புகைப்படத்தை பொலிஸ் தலைமையகம் அனுப்பிவைத்துள்ளது.
இந்தப் படுகொலைக்கு ரி-56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவு மேற்கொண்டுள்ளது.
படத்தில் உள்ள மேற்படி நபர், தான் வசிக்கும் இடத்தில் இருந்து தலைமறைவாகி விட்டார். அவர் தொடர்பிலான தகவல் கிடைத்தால், 0718591733, 0718591735 அல்லது 0718596503 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு தலைமையகம் கேட்டுக்கொண்டுள்ளது.
சந்தேகநபரான லங்கா ஏக்கநாயக்க, 1989.03.19 அன்று பிறந்துள்ளார். 33 வயதான இந்த நபரின் தேசிய அடையாள அட்டை இலக்கம், 890790410 v என்பதுடன், இவர் கொதட்டுவ மற்றும் மருதானை ஆகிய இரண்டு இடங்களை வசிப்பிடமாகக் கொண்டுள்ளார்.
இரவு விடுதியின் முகாமையாளரான இவர், தனது இடது கையின் மணிக்கட்டுக்கு மேல், பறவையொன்றின் இறக்கையை, கருப்பு நிறத்தில் பச்சைக்குத்தியுள்ளார் என்றும் பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொரளையில் படுகொலைச் செய்யப்பட்டவர், தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) முன்னாள் புலனாய்வாளர் என தெரிவிக்கப்படுகிறது. அவரை படுகொலைச் செய்வதற்கு வந்த ஆயுததாரிகள் பயன்படுத்தி கெப் ரக வாகனம் இம்புல்கொடயில் வைத்து கொழும்பு குற்றப்பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது