யாழில் கூட்டு வன்புணர்வு பிரதான சந்தேகநபர் கைது!
நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற கூட்டு வன்புணர்வு தொடர்பில் பிரதான சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். அவரை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யுவதி ஒருவருக்கு தொலைபேசியில் வந்த தவறான அழைப்பையடுத்து யுவதிக்கும் குறித்த இளைஞனுக்கும் இடையில் தொலைபேசியில் காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது. துன்னாலை பகுதியைச் சேர்ந்த பிரதான சந்தேக நபர் யுவதியை நேரில் சந்திக்க வருமாறு அழைத்துள்ளார். இதையடுத்து யுவதியும் வீட்டில் இருந்த நகைகள் மற்றும் 40 ஆயிரம் ரூபா பணத்துடன் அவரை சந்திக்கச் சென்றுள்ளார்.
இதன் போது திக்கம் பகுதியில் உள்ள பற்றைக் காணி ஒன்றிற்குள் அழைத்துச் சென்று யுவதியுடன் பாலியல் தொடர்பில் ஈடுபட்டுள்ளார். இதன் பின்னர் தண்ணீர் அருந்தி வருவதாகக் கூறிச் சென்றதும் அங்கு வந்த மூன்று இளைஞர்கள் பிரதான சந்தேக நபரின் நண்பர்கள் என அறிமுகமாகி யுவதியை வன்புணர்வுக்கு உட்படுத்தி உள்ளனர்.
இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த பிரதான சந்தேகநபர் யுவதியிடம் இருந்த பணம், தொலைபேசி, நகைகள் என்பவற்றை அபகரித்துக்கொண்டு வீதியில் விட்டு தப்பிச் சென்றுள்ளார். இதனையடுத்து குறித்த யுவதி நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் பிரதான சந்தேக நபரைத் தேடி வந்த நிலையில் அவர் தலைமறைவாகியிருந்தார்.
இந்நிலையில் நேற்றைய தினம் நெல்லியடி பொலீஸார் பிரதான சந்தேகநபரைக் கைது செய்துள்ளனர். அவரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் அன்றைய தினம் அடையாள அணிவகுப்பை மேற்கொள்ளவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.