கிளிநொச்சி முரசுமோட்டை கொரக்கன் காட்டுப்பகுதியில் இரண்டு ஏக்கர் வயல் நெற்பயிர்களுக்கு தடைசெய்யப்பட்ட கிருமிநாசினியான ரவுன்டப் எனப்படும் கிருமிநாசினி இனந்தெரியாத நபர்களால் வீசப்பட்டுள்ளது.
தனிப்பட்ட பகை காரணமாகவே பயிர்செய்கை செய்யப்பட்டு 50 நாட்கள் கடந்த இரண்டு ஏக்கர் நெல்பயிர்கள் மீது ரவுன்டப் கிருமிருநாசினி விசிறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் நாசகார செயற்பாட்டினால் இரண்டு ஏக்கர் வயல் முற்றாக அளிவடைந்துள்ளதாகவும் இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி கமநலசேவை நிலைய விவசாய போதனா ஆசிரியர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டதுடன் தடைசெய்யப்பட்ட கிருமிநாசினி விசிறப்பட்டமையினை உறுதிசெய்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.