வடமேற்கு சீனாவின் கன்சு, குயின்காங் ஆகிய மாகாணங்களில் நேற்று முன்தினம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 134 ஆக உயர்ந்துள்ளது.
குறித்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவுகோலில் 6.2 புள்ளிகளாக பதிவானதோடு தென் சீனக்கடலுக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் உருவானதாக சீன வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இதனால் சீனாவில் கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தியது, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தன. மேலும், கட்டிட இடிபாடுகளில் சிக்கி 127 பேர் பலியானதாக செய்திகள் வெளியாகி இருந்தன.
இந்தநிலையில் பலி எண்ணிக்கை 134 ஆக உயர்ந்துள்ளதாகவும், 980 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்த நாட்டின் பேரிடர் மீட்புத்துறை தெரிவித்துள்ளது. அத்தோடு, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.