அண்மைய சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களுக்கு ஆதரவாக ஜப்பான் அரசாங்கம் அண்ணளவாக ரூ. 300 மில்லியன் பெறுமதிமிக்க நிவாரணங்களை வழங்கியுள்ளது.
இலங்கையில் உள்ள ஜப்பானிய தூதரகம் மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) ஆகியவற்றின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட அவசரகால பொருட்கள் சனிக்கிழமை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடைந்தன.
இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் Isomata Akio உத்தியோகபூர்வமாக உள்ளூர் அதிகாரிகளிடம் பொருட்களை கையளித்தார். சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மாவட்ட செயலாளர்கள் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகிக்கப்படும்.