யாழ்.போதனா வைத்தியசாலையில் இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டதாக யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
எம்.பி.யின் நடத்தை மருத்துவ ஊழியர்களின் பணிகளில் தலையிடுவதாக வைத்தியசாலை இயக்குநர் வைத்தியர் டி.சத்தியமூர்த்தி அளித்த முறைப்பாட்டு மனுவில் கூறப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகம் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.