இரத்தினபுரி, எம்பிலிபிட்டிய ஜனாதிபதி கல்லூரியில் உயர்தர பரீட்சை கடமைகளில் ஈடுபட்டிருந்த போது மது போதையில் அநாகரீகமாக செயற்பட்டு பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை தாக்கியதாக கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நேற்று திங்கட்கிழமை (9) கைது செய்யப்பட்டதாக எம்பிலிபிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
எம்பிலிபிட்டிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் சார்ஜன்ட் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.