பிரான்ஸ் இதுவரை சந்தித்திராத காலநிலை மாற்றம்!
புவி வெப்பமடைதல் காரணமாக உலகம் முழுவதும் காலநிலை பெரும் மாற்றங்களை சந்தித்து வருகிறது. கடுமையான வெப்பம் நிலக்கீழ் நீர் வரட்சியை பல நாடுகளில் ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் இன்று செப்டம்பர் 29ம் திகதியும் தொடர்ந்து வரும் சனி, ஞாயிறு தினங்களும் பிரான்ஸ் தேசம் இதுவரை சந்திக்காத வெப்பமான வானிலையை சந்திக்கிறது என பிரான்ஸ் காலநிலை அவதான மையம் தெரிவித்துள்ளது.
காலநிலை நிபுணர் Christine Berne o காலநிலை மாற்றம் குறித்து கருத்துத் தெரிவிக்கையில் “பிரான்ஸின் பிரதான நிலப்பரப்பில் இதுவரை பதிவு செய்யப்படாத அளவில் இவ்வாண்டு செப்டம்பர் மாதத்தில் வெப்பநிலை பதிவாகியிருகின்றது. 1991முதல் 2020 வரையான காலகட்டத்தில் செப்டம்பரில் சராசரி வெப்பநிலை 21.5 டிகிரி செல்சியஸ்தான் அதிக வெப்பநிலையாக இருந்து வந்துள்ளது, ஆனால் 2023 கூடுதலாக 3.5 டிகிரி செல்சியஸ் முதல் 3.6 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்துள்ளது” என
தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் காலநிலை அவதான மையத்தின் அறிக்கையின்படி, 2023 ஜூன், ஜூலை, ஓகஸ்ட் மாதம் இருந்த வெப்பநிலை போன்று இது பிரான்சின் நான்காவது வெப்பமான காலநிை மாதமாக இருக்கிறது, அடுத்து வரும் ஒக்ரோபர் மாதத்தில் முதல் இரு வாரங்களின் பின்னர் காலநிலை வழமைக்கு திரும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.