பிரான்ஸில் ஓர்பாலின சேர்க்கையாளர்கள் மீது அதிகரிக்கும் தாக்குதல்!
கடந்த ஆண்டுகளை விட இவ்வருடத்தில் Homophobic என அழைக்கப்படும் ஒருபாலின சேர்க்கையாளர்கள் மீது நடாத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
தலைநகர் பரிசில் இவ்வருட ஆரம்பம் முதல் இதுவரை 419 தாக்குதல்கள் அவர்கள் மீது நிகழ்த்தப்பட்டுள்ளது. இவற்றில் 72 தாக்குதல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. 56 பேர் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளனர். சென்ற 2022 ஆம் ஆண்டில் மொத்தமாக 400 தாக்குதல்கள் பரிசில் இடம்பெற்றிருந்த நிலையில், இவ்வருடத்தில் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
வீதிகளில் வைத்தும், பொது போக்குவரத்துக்களில் வைத்தும் ஏனைய பல பொது இடங்களிலும் வைத்து ஓர்பாலின சேர்க்கையாளர்கள் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.