இலங்கையில் உள்ள இஸ்ரேலியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ரணில் உத்தரவு!
இஸ்ரேலில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதல்கள் மற்றும் அங்கு வாழும் இலங்கையர்கள் மற்றும் இஸ்ரேல் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (09) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்தார்.
இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு துரித நடவடிக்கை எடுக்குமாறும், தற்போது நாட்டிலுள்ள இஸ்ரேலிய பிரஜைகளை நாடு திரும்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் வெளிவிவகார அமைச்சிற்கு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி , இலங்கையில் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் பொலிஸாருக்கு அறிவித்தார்