தாயார் இறந்த சோகம் தாங்காது அவரது மகன் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் நெல்லியடிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
யாழ். நெல்லியடி கொற்றாவத்தை பகுதியை சேர்ந்த சீனித்தம்பி சுதர்சன் (வயது – 32) என்பவரே கடந்த 27ஆம் திகதி உயிர் மாய்த்துள்ளார்.
இவர் மன்னார் மாவட்ட அரச திணைக்களம் ஒன்றின் அலுவலகர் ஆவார். தாயார் உயிரிழந்த நிலையில், தாயாரின் பிரிவால் அடிக்கடி மனவேதனையில் இருந்துள்ளார்.
இந்தநிலையில் தாயின் இழப்பை தாங்க முடியாது விரக்தியுடன் காணப்பட்ட அவர் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு உயிர் மாய்த்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.