தாய்லாந்தின் மன்னர், திருமண சமத்துவ சட்டத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
இதன் மூலமாகத் தென்கிழக்கு ஆசியாவில் தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்கும் முதல் நாடாக தாய்லாந்து மாறியுள்ளது.
இந்த சட்டமூலம் கடந்த ஜூன் மாதம் நாடாளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட போதிலும், அதனைச் சட்டமாக மாற்றுவதற்கு அரச அனுமதி தேவைப்பட்டது.
அதற்கமைய, அதனை சட்டமாக அங்கீகரிக்கும் அரச வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டது.
அதற்கமைய, அடுத்த வருடம் ஜனவரி மாதம் 22ஆம் திகதி முதல் குறித்த சட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது.
குறித்த தினத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுப் பாலின ஜோடிகள் திருமணம் செய்வதற்குத் தயாராகிவருவதாகத் தாய்லாந்தின் மாற்றுப் பாலினத்தவர்களின் அமைப்பு தெரிவித்துள்ளது.