சட்டவிரோதமாக தங்கம் மற்றும் கையடக்க தொலைபேசிகளை வௌிநாட்டிலிருந்து கொண்டு வந்த 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டுபாயிலிருந்து வருகை தந்த சந்தேகநபர்களிடமிருந்து தீர்வை வரி செலுத்தப்படாத 03 கிலோகிராம் தங்கமும் 39 கையடக்க தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளன.
அக்குரணை, நீர்கொழும்பு மற்றும் திருகோணமலையை சேர்ந்த 4 ஆண்களும் 2 பெண்களுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.