யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை – இளம் தாய் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் – 27.09.2025
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட இளம் தாய் ஒருவரின் உயிரிழப்பு பரவலான சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டச்சுவீதி, உடுவில் மேற்கு, சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 29 வயதான நிருன் டர்சிகா, ஒரு பிள்ளையின் தாயாவார். கடந்த 19.05.2025 அன்று வயிற்றுக்குத்து (stomach ulcer) காரணமாக வயிற்றில் சத்திர சிகிச்சை செய்யப்பட்டிருந்தார். அப்போது வயிற்றில் ஒரு குழாய் வைக்கப்பட்டிருந்தது.
அந்த குழாயை அகற்றுவதற்காக 24.09.2025 அன்று அவர் மீண்டும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். நேற்றைய தினம் (25) குழாய் அகற்றும் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், சிகிச்சை நிறைவில் அவர் திடீரென உயிரிழந்தார்.
இச்சம்பவத்தையடுத்து, திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மரண விசாரணைகளை மேற்கொண்டார். சம்பவம் தொடர்பான சாட்சிகளிடம் சுன்னாகம் பொலிஸார் வாக்குமூலங்கள் பதிவு செய்துள்ளனர்.
Editor: கதிர்