மக்ரோன் செய்த மோசமான செயல்: கொதிக்கும் பிரித்தானியர்கள்!
மூன்று நாள் விஜயமாக பிரித்தானியாவின் மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் மற்றும் அவரது மனைவி கமிலியா ஆகியொர் பிரான்சிற்கு வந்திருந்தனர்.
இதில் ஒரு அங்கமாக வெற்றி வளைவும் வீழ்ந்துபட்ட மாவீரர்களின் நினைவிடமுமான Arc de triomphe. இற்கு மன்னர் சார்ள்ஸ், அவர் மனைவி கமிலா, ஜனாதிபதி எமானுவல் மக்ரோன் மற்றும் அவர் மனைவி பிரிஜித் மக்ரோன் ஆகியோரும் சென்றிருந்தனர்.
அவ்வேளையில் பிரெஞ்சு முறையில் பிரிஜித் மக்ரோன் கமிலியாவின் கன்னத்தில் முத்தமிட்டுள்ளார். அதே நேரம் எமானுவல் மக்ரோன் சார்ள்சின் வலது கரத்தினை அழுத்தி நட்பைத் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் பிரித்தானியர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய ஊடகங்களும் இது ஒரு மோசமான செயல் என விமர்சித்தது வருகிறது.