தனித்தீவில் பொட்டம்மான்: வெடித்தது புதிய சர்ச்சை!
யுத்தம் முடிந்து சரியாக ஒரு வருடத்தின் பிறகு கடந்த 2010ஆம் ஆண்டு தான் பொட்டமானைச் சந்தித்ததாகவும், அவரை சந்தித்த வேளை தூரத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் இருந்ததாகவும் குறிப்பிட்டார் ஐரோப்பிய நாடுகளில் தமிழ் தேசிய செயற்பாடுகளில் ஈடுபடும் முக்கியஸ்தர் தெரிவித்ததாக கனடாவில் உள்ள அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே ஆய்வாளர் நேரு குணரட்ணம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
தான் ஒரு தீவுக்கு அழைக்கப்பட்டதாகவும், அந்த தீவிற்கு தான் செல்லும் போது அங்கு பொட்டம்மான் தான் என்னுடன் பேசினார். தலைவர் அல்ல, அவர் தள்ளியிருந்தார். அவரை நான் சந்திக்கவில்லை, பொட்டம்மன் என்னென்ன விடயங்களை செய்ய வேண்டும் என சொல்லிவிட்டிருக்கின்றார் என்று ஐரோப்பிய தமிழ் செயற்பாட்டாளர் தெரிவித்ததாக நேரு குணரட்ணம் குறிப்பிட்டார்.
இந்த தகவலை அவர் பரிமாறியபோது, இதனுடைய உண்மைத் தன்மையினைத் தாண்டி, இதனை யார் சொல்ல வைக்கிறார்கள் என்று தேடிய போது அவர் இந்திய வட்டகைக்குள் இருப்பது தெரியவந்தது.
அதன் பிறகு நீண்டதொரு இடைவெளி, பின்னர் அண்மையக் காலங்களில் விடுதலைப் புலிகளினுடைய தலைவர் உயிருடன் இருக்கின்றார் என செய்தி பரவி வருகின்றது
ஆனால் இப்போது அதில் ஒரு மாற்றம் செய்து கதை பரப்புகிறார்கள்..விடுதலைப் புலிகளின் தலைவர் இருக்கின்றார். ஆனால் செயற்பட முடியாதவராக இருக்கின்றார். அடுத்தக் கட்டத்திற்கு அவரது மகளை முன்னகர்த்திச் செல்லும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார் என குறிப்பிடுகின்றனர் என அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார்.