பிரான்ஸில் வசிக்கும் இஸ்ரேலியர்கள் குடியிருப்புகளின் பாதுகாப்பை அதிகரிக்க மக்ரோன் உத்தரவு!
பிரான்ஸில் யூத இன மக்கள் குடியிருக்கின்ற பகுதிகளில் அவர்களது பாதுகாப்பை உறுதி செய்யுமாறு உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டாமன்னா சகல பொலீஸ் தலைமையகங்களுக்கும் உத்தரவிட்டிருக்கிறார்.
இஸ்ரேல் – பலஸ்தீனம் இடையே எதிர்பாராத சமயத்தில் மூண்டுள்ள கடும் சண்டையின் எதிரொலியாக யூத குடிமக்களது பாதுகாப்புக் குறித்த அச்சங்கள் எழுந்துள்ளன. அதனையடுத்தே அரசு யூதர்களைப் பாதுகாக்கின்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அதிபர் மக்ரோன் இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கம் நடத்திய தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். இஸ்ரேலுக்குத் தனது ஆதரவை தெரிவித்துள்ள அவர், பிரான்ஸில் யூத இன மக்கள் கூடுகின்ற பாடசாலைகள், வழிபாட்டுத் தலங்களது பாதுகாப்பை அதிகரிக்குமாறு உள்துறை அமைச்சரைப் பணித்துள்ளார் – என்று பாரிஸ் செய்தி ஊடகங்கள் தெரிவித்தன.