பிரான்ஸ் பொது போக்குவரத்து சபை இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்!
இல்து பிரான்ஸ் பொது போக்குவரத்து சபையின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் முயற்சி ஒன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 6, வெள்ளிக்கிழமை இந்த சைபர் தாக்குதல் முயற்சி இடம்பெற்றதாகவும், 4,000 பேரின் தரவுகள் திருட முற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் முயற்சியை அடுத்து போக்குவரத்து சபை வழக்கு தொடுத்துள்ளது.
ஆனால் இந்த கொள்ளை முயற்சி தோல்வியில் முடிந்ததாகவும், தரவுகள் எதுவும் திருடப்படவில்லை எனவும்,
பயனாளர்கள் அச்சமடையத்தேவையில்லை எனவும் போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.
அதேவேளை, இதே போன்ற மற்றுமொரு தாக்குதல் இடம்பெறாமல் இருக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.