பிரான்ஸில் பலஸ்தீன ஆதரவு போராட்டங்களுக்கு தடை!
பாலஸ்தீன ஆதரவாளர்களால் முன்னெடுக்கப்படும் அனைத்து ஆர்ப்பாட்டங்களுக்கும் தடை விதிக்கப்படும் என உள்துறை அமைச்சர் இன்று அறிவித்தார்.
இன்று வியாழக்கிழமை பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட இருந்த நிலையில், அனைத்து போராட்டங்களுக்கும் காவல்துறையினர் தடை விதித்துள்ளனர். அதேவேளை, நாளை வெள்ளிக்கிழமையும், மறுநாள் சனிக்கிழமையும் பல்வேறு போராட்டங்கள் இடம்பெற திட்டமிட்டுள்ள நிலையில், அவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொது ஒழுங்கு விதிகளை பாதிக்கும் வகையில் ஆர்ப்பாட்டங்களுக்கு திட்டமிடப்பட்டிருப்பதால் அவற்றை அனுமதிக்க முடியாது என தெரிவித்த அமைச்சர், அடுத்து வரும் நாட்களில் திட்டமிடப்பட்ட அனைத்து ஆர்ப்பாட்டங்களுக்கும் தடை விதிக்கும் உத்தரவினை அனைத்து காவல்நிலையங்களுக்கு அறிவித்துள்ளதாகவும் உள்துறை அமைச்சர் தெரிவித்தார்
நாளை சனிக்கிழமை நாட்டின் பல்வேறு நகரங்களில் பாலஸ்தீனத்துக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. அனைத்து ஆர்ப்பாட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.