யாழில் சுற்றிவளைக்கப்பட்ட விபச்சார விடுதி!
யாழ்ப்பாணம், இளவாலை பொலிஸ் பிரிவில் நீண்டகாலமாக இயங்கி வந்த விபச்சார விடுதியொன்று நேற்று (18) பொலிசாரால் சுற்றிவளைக்கப்பட்டு, 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
விபச்சார விடுதியாக செயற்பட்ட வீட்டில் தங்கியிருந்த 2 யுவதிகளும், 3 ஆண்களும் கைது செய்யப்பட்டனர்.
நீண்டகாலமாக இந்த விபச்சார விடுதி இயங்கி வந்தது. சுழிபுரம், சங்கானை, கிளிநொச்சி பகுதிகளிலிருந்து யுவதிகள் அங்கு வந்து விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். ரூ.500 தொடக்கம் ரூ.10000 வரை கட்டணம் அறவிடப்பட்டுள்ளது.
அந்த வீட்டுக்கு வந்து, யுவதிகளை தெரிவு செய்து அழைத்துக் கொண்டு சென்று, யாழ் நகர விடுதிகளில் உல்லாசமாக இருக்கும் சேவையும் வழங்கப்பட்டு வந்துள்ளது.
நாளாந்தம் 20 இற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் அங்கு செல்வதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இரு யுவதிகளும் அங்கு வந்த மூன்று ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.