இயற்பெயர்:விஜய குருநாத சேதுபதி காளிமுத்து
(1)சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் தனது கடின உழைப்பால் முன்னேறி வெற்றி பெற்ற நடிகர்களில் இவரும் ஒருவர்.
(2)இவர் தன் படிப்பை முடித்த பிறகு ஒரு ஜவுளி அலுவலகத்தில் அக்கவுன்டன்ட் ஆக பணிபுரிந்திருக்கிறார்.அது மட்டுமின்றி படிக்கும் வயதிலேயே பாஸ்ட் புட் மற்றும் தொலைப்பேசி பூத்-தில் பகுதி நேர ஊழியராக வேலை செய்திருக்கிறார்.
(3)துபாயிலும் ஒரு சில வருடங்கள் வேலை பார்த்திருக்கிறார்.அப்போது இன்டர்நெட் மூலமாக ஜெஸ்ஸி என்பவரை காதலித்து வந்தார்.பின்பு 2003 இந்தியா வந்து தனது காதலியான ஜெஸ்ஸியை திருமணம் செய்து கொண்டார்.
(4)இவர்களுக்கு இப்போது ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.இவர் மகளின் பெயர் ஸ்ரீஜா மற்றும் மகனின் பெயர் சூர்யா.
மறைந்த தனது பள்ளிப்பருவ காலத்து நண்பரான சூர்யா என்பவரின் நினைவாக தன் மகனுக்கும் அதே பெயரை வைத்ததாக நேர்காணலில் கூறியுள்ளார்.
(5)பல வருடங்களுக்கு முன்பு “உலகநாயகன்” கமல்ஹாசன் நடித்த நம்மவர்(1995) படத்தின் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் தேர்வுக்காக இவர் சென்ற போது உயரம் குறைவாக இருப்பதை காரணம் காட்டி தேர்வு செய்யபடவில்லை.
அதன்பின் இவர் திரைத்துறைக்கு வந்த பிறகு ஒரு நாள் கமல்ஹாசன் தனது வீட்டிற்கு அழைத்து விஜய் சேதுபதியிடம் பேசினார்.இது இவர் வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத சம்பவங்களில் ஒன்றாக பல பேட்டிகளில் கூறி இருக்கிறார் விஜய் சேதுபதி.
(6)2006-ல் சன் டிவியில் ஒளிபரப்பான “பெண்” என்ற சீரியலில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
(7)இவரின் எதார்த்தமான நடிப்பை திரையில் கண்டு பாராட்டாமல் இருப்பவர்கள் மிகவும் குறைவு.இதற்கு முழுமுதற் காரணம் குறும்படங்களில் நடிக்கும் போதே நடிப்பில் தன்னை தானே நன்கு மெருகேற்றி கொண்டமையே ஆகும்.
குறும்படங்களில் நடிக்கும் போதே இவரின் நடிப்பு திறனை கண்டு பெரிய திரையில் இவர் முன்னணி நடிகராக வருவார் என்று அப்போதே கணித்திருக்கின்றனர் அன்றைய குறும்பட இயக்குனர்களான மணிகண்டன்,கார்த்திக் சுப்புராஜ் மற்றும் நலன் குமாரசாமி ஆகியோர்.
(8)இவர் திரைப்படங்களில் நாயகனாக நடிப்பதற்கு முன்பே கோகுலத்தில் சீதை,புதுப்பேட்டை,M.குமரன் S/O மகாலட்சுமி,நான் மகான் அல்ல,பலே பாண்டியா,வெண்ணிலா கபடி குழு, அஞ்சாதே,லீ,சுந்தரபாண்டியன் போன்ற படங்களில் பின்னணியில் சில காட்சிகளில் தோன்றியும் சிறுசிறு கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார்.
(9)2010-ஆம் ஆண்டு சீனு ராமசாமி இயக்கத்தில் வெளிவந்த “தென்மேற்கு பருவக்காற்று ” படத்தில் தான் இவருக்கு கதாநாயகனாகும் வாய்ப்பு முதன்முறையாக கிடைத்தது.
(10)அதன்பின் நல்ல கதையம்சம் உள்ள படைப்புக்களை தேர்ந்தெடுத்து பல புது இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து தானும் உயர்ந்து மற்றவர்களின் வாழ்க்கையையும் உயர்த்தி மேம்படுத்தும் வகையில் தனது திரைப்பயணத்தை கட்டமைத்தார்.
(11)நாயகனாக மட்டுமே நடிப்பேன் என்றில்லாமல் வில்லனாகவும் (பேட்ட,மாஸ்டர்)வித்தியாசமான கதாபாத்திரங்களை கொண்ட படங்களிலும்(ஆரஞ்சு மிட்டாய்,சூப்பர் டீலக்ஸ்,சீதக்காதி) நடித்து எந்த விதமான நாயக பிம்பத்துக்குள்ளும் சிக்காமல் இருந்து இருக்கிறார்.
(12)தான் ஒரு பெரிய நடிகர் என்ற பந்தா இல்லாமல் அனைவரிடமும் சரிசமமாக பழகும் குணம் கொண்டவர். அதனால் தானோ என்னவோ இதுவரை 8 படங்களில் கவுரவ தோற்றத்தில் நடித்து கொடுத்திருக்கிறார். அவைகள் ஜிகர்தண்டா,கதை திரைக்கதை வசனம் இயக்கம்,திருடன் போலீஸ்,கதாநாயகன்,டிராபிக் ராமசாமி,இமைக்கா நொடிகள்,ஆக்ஷன் மற்றும் ஓ மை கடவுளே.
(13)இவர் அதிகமாக பணியாற்றிய இயக்குனர்கள்.
சீனு ராமசாமி இயக்கத்தில் 4 படங்கள்(தென்மேற்கு பருவக்காற்று,இடம் பொருள் ஏவல்,தர்மதுரை, மாமனிதன்)
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 4 படங்கள்(பீட்ஸா,இறைவி, பேட்ட(வில்லன் கதாபாத்திரம்), ஜிகர்தண்டா(கவுரவ தோற்றம்))
S. U. அருண்குமார் இயக்கத்தில் 3 படங்கள்(பண்ணையாரும் பத்மினியும்,சேதுபதி,சிந்துபாத்)
(14) இவர் தயாரித்தது மொத்தம் 4 படங்கள்(ஆரஞ்சு மிட்டாய், ஜூங்கா,மேற்குத்தொடர்ச்சி மலை,சென்னை பழனி மார்ஸ்)
(15)இறுதியாக சாதிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு அவர் கூறிய தன்னம்பிக்கை வார்த்தைகள்
“ஒரு நடுத்தர வர்கத்து இளைஞனுக்கு எப்பவுமே ஒரு ஏக்கம் இருக்கும்
அந்த ஏக்கம் தான் தொடக்கம்னு நான் நினைக்குறேன்
இந்த பக்கமா இல்ல அந்த பக்கமா-னு ?
நான் பி காம் சேர்ந்துட்டு காலேஜ் போகும் போது என்ஜினீயர் ஆகியிருக்கலாமோ இல்ல டாக்டர் ஆகியிருக்கலாமோ-னு தோன்றி இருக்கு
ஆனா சயின்ஸ் எனக்கு வரவே வராது.
எனக்கு எதுவுமே வராதுன்னு நினைச்சுகிட்டு இருந்தேன்
பயங்கரமான இன்பிரியர் காம்பிலக்ஸ்
நான் ஆளும் பாக்குறதுக்கு நல்லாயில்ல-னு நினைச்சிருக்கேன்
எனக்கு பேச வராதுன்னு நினைச்சிருக்கேன்
சிந்திக்க வராது படிச்சா படிப்பு ஏறாது
இப்படி எல்லா விஷயமும் சேர்த்து என்னை டிப்பிரெஸ் பண்ணிகிட்டே இருந்தது.
ஆனா என்னிக்கு என்னை புரிஞ்சதோ அன்னிக்கு நான் தைரியமா லைப்-ப ஒடைச்சுக்கிட்டு வெளியே வர ஆரம்பிச்சேன்.
நான் வெளியே வந்து பார்த்தா நான் புத்திசாலினு நம்புன நிறைய பேர் முட்டா பசங்களா இருந்தாங்க
அவுங்க புத்திசாலினு நம்புனது தான் என்னோட முட்டாள்தனம்னு புரிஞ்சது
எடுத்தவுடனே சினிமா ஆபீசே என்னால கண்டு பிடிக்க முடியாது அப்புறம் ஒரு ஆபீஸ் கண்டு புடுச்சேன் அங்க ஒரு பிரண்ட் புடுச்சேன்
அவர் மூலமா சில ஆபீஸ் தெரிஞ்சது அங்க சில பிரண்ட்ஸ் கிடைச்சாங்க
ஒரு விஷயத்தை அடிப்படையில் இருந்து கற்கும் போது மெல்ல மெல்ல அந்த விஷயம் பழகுது திரைத்துறைக்கு வந்த பிறகு எனக்கு கிடைச்ச முதல் பாடம் “தேர் இஸ் நோ ப்பான் ஆக்டர் (There is no Born Actor)”
ஒரு ஸ்டில் போட்டோகிராபர் எடுக்குற கேமரா-வ என்னால பேஸ் பண்ண முடியாது
அவ்வளோ கூச்சம்,அதிகமான இன்பிரியாருடி காம்பிலக்ஸ் உள்ள ஒரு ஆளா இருந்தேன்
அப்புறம் நான் எனக்குள்ள இருந்த எல்லா நெகடிவ்களையும் பிரேக் பண்ணிட்டு தான் உள்ளே வந்தேன் “லவ் யுவர் ப்ரோபசன்(Love your Profession)” கண்டிப்பா ஒரு நாள் நினைச்சு பார்ப்பீங்க. அந்த ரியலைசேஷன் பாயிண்ட்-க்கு(Realization Point) அப்புறம்
உங்க லைப்-ல நடக்குற எல்லாமே பாண்டஸி(Fantasy) தான் ”
நன்றி