சுண்ணாகம் பொலிஸாரின் அடாவடி : சரவணபவன் கண்டனம்!
யாழ் சுண்ணாகம் பகுதியில் இளம் தாய் தாக்கப்பட்டதுடன் அவரின் இரண்டு மாத குழந்தையும் பாதிக்கப்பட்டதான செய்தி அதிர்ச்சி தருகிறது.
சட்டத்தை பாதுகாக்க வேண்டிய பொலிஸார் காவாலிகள் போல் நடந்துகொள்வது கண்டிக்கத்தக்கது. குறித்த சம்பவம் தொடர்பில் உடனடியாக நீதியான விசாரணை மேற்கொண்டு குற்றத்தில் ஈடுபட்டவர்களை தண்டிக்க வேண்டும்.
இந்த நாட்டில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழர் பகுதிகளில் அதிகார அராஜகம் மட்டும் குறைவதில்லை. இந்த கொடூர சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை மேற்கொண்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றார்.