ஜனாதிபதியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் சமூக ஊடக அவதூறுகள் – CID விசாரணை ஆரம்பம்
கொழும்பு – 12.08.2025
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் போலியான தகவல்கள் மற்றும் அவதூறுகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவு (CID) விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளது.
பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய அவர்களின் உத்தரவின் பேரில், இந்த அவதூறு பிரச்சாரங்களுடன் தொடர்புடைய சமூக வலைத்தளங்கள் மற்றும் யூடியூப் அலைவரிசைகள் மீது CID விசேட குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
பொலிஸ் வட்டாரங்களின் தகவலின்படி, இந்த போலிப் பிரச்சாரங்களை உருவாக்கும் போது அரசாங்க அமைச்சர்கள் மற்றும் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் சிலரின் பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவில் உத்தியோகபூர்வ முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்ததாவது, இந்த போலிப் பிரச்சாரங்கள் காரணமாக ஜனாதிபதி, அரசாங்கம் மற்றும் அமைச்சர்களின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
—
Editor: கதிர்