கிளிநொச்சியில் 68 வயதான பெண் கொலை – அடையாளம் தெரியாத நபர்கள் மீது சந்தேகம்
கிளிநொச்சி – 11.08.2025
கிளிநொச்சி மாவட்டத்தில் 68 வயதான ஒரு வயோதிப பெண் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த துயரச் சம்பவம் நேற்று (11) மாலை கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 1/2 ஏக்கர் திட்டம், ஊற்றுப்புலம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் விஜயரத்தினம் சரஸ்வதி (வயது 68) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் தனிமையில் வீட்டில் வசித்து வந்த நிலையில், அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து தாக்கியதில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என ஆரம்பக்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.
சம்பவம் குறித்து கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
—
Editor: கதிர்