குருணாகலில் குடும்ப தகராறில் மகன் கொலை – தாய் மருத்துவமனையில்
செப்டம்பர் 20, 2025
குருணாகல் மாவட்டம் தேவலேகம பொலிஸ் பிரிவின் பட்டுவத்த பகுதியில் இடம்பெற்ற கொடூரமான தாக்குதலில், ஒரு இளைஞன் உயிரிழந்துள்ளான்.
பொலிஸார் தெரிவித்ததாவது, நேற்று (19) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில், தாக்குதலில் காயமடைந்த அவரது தாய் தற்போது கேகாலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உயிரிழந்தவர் பட்டுவத்த ஹலமட பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஆண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
முதல் கட்ட விசாரணைகளில், குடும்ப தகராறு காரணமாக தடியால் தாக்கப்பட்டு இந்தக் கொலை நிகழ்ந்தது என தெரிவிக்கப்படுகிறது.
சடலத்திற்கு நீதவான் விசாரணை நடைபெறவுள்ளது. சம்பவம் தொடர்பாக தேவலேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Editor: கதிர்